மனைவியின் கழுத்தை கரகரவென்று அறுத்த கொடூர கணவர்.. காரணம் என்ன தெரியுமா ?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குண்ட்லபுரிஞ்சி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாபுராவ் (25), கிரண்மய் (22) தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. திருணம் ஆனதில் இருந்து இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
பாபுராவ் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாபுராவ் கிரண்மயை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மனைவியின் கழுத்தை, அவரது கணவர் பாபுராவ் கத்தியால் அறுத்துள்ளார். வலியால் துடித்த கிரண்மயியின் சத்ததை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், பாபுராவ் அங்கிருந்து தப்பியோடினார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிரண்மயியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பாபுராவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in