1. Home
  2. தமிழ்நாடு

போலீசாரிடம் தப்பிக்க ஃப்ரீசரில் ஒளிந்து கொண்ட குற்றவாளி..! இறுதியில் சடலமாக மீட்பு..!

1

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் ஆளில்லாத வீட்டில் உள்ள ஃப்ரீசரில் கடந்த மாதம் 26-ம் தேதியன்று இறந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் பெயர் பிராண்டன் லீ புஷ்மேன் (34) என்பது தெரியவந்தது. போலீசிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒருவேளை இவர் ஃப்ரீசரில் வந்து ஒளிந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பிராண்டனை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், போலீசாரால் அவர் தேடப்பட்டு வந்துள்ளார். தப்பிக்க முயற்சி செய்யும்போது அந்த வீட்டின் ஃப்ரீசரில் ஒளிந்துள்ளார். ஆனால் அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

Minnesota

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது காயங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. அந்த வீட்டில் எந்த மின்சார வீட்டு உபயோகப் பொருட்களும் மின்சாரத்துடன் இணைக்கப்படாமல் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இருந்துள்ளது.

அவரது உடல் மீட்கப்படும்போது எந்த சாதனமும் மின்சாரத்துடன் இணைக்கப்படாமல் இருந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அந்த வீடு ஆளில்லாமல் கிடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Minnesota

பிராண்டன் ஒளிந்து கொண்ட ஃப்ரீசர் மிகவும் பழைய மாடலாகும். அதனை வெளியே இருந்து மட்டுமே திறக்க முடியும். உள்ளே இருந்து திறக்க முடியாது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனுள் சொருகப்பட்ட ஒரு உலோக கம்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதனைத் திறக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீசாரிடம் இருந்து தப்பித்து ஃப்ரீசரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like