நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி..!

அமெரிக்க அதிபராக இப்போது பைடன் இருந்து வருகிறார். அங்கு இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், பைடனுக்கும் டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த சூழலில் அதிபர் ஜோபைடன் தனது மூத்த மகன் ஹண்டர் பைடன் குறித்து வருத்தம் அடைந்துள்ளார்.
கடந்த 2018இல், ஹண்டர் பைடன் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு ஹண்டர் பைடன் போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஹண்டர் பைடன் அப்போது போதைப் பொருளைப் பயன்படுத்தி இருக்கிறார். இந்த துப்பாக்கியை அவர் சுமார் 11 நாட்கள் தன்வசம் வைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாகவே அவர் மீது கடந்த 2023 செப். மாதம் வழக்குகள் தொடரப்பட்டன. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் கூறியது, போதைப் பொருள் பயன்படுத்தும் போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.போதைப் பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.
அதன்படி இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோபைடன் அதிரடியாக அறிவித்துள்ளார். நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது.
ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்க துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார். ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.
இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்ட நிலையில், மூன்றிலும் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில் முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.