1. Home
  2. தமிழ்நாடு

ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது... ஆனால் தமிழகத்தில் தினம் தினம் – அண்ணாமலை கண்டனம்!

1

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விடுத்துள்ள பதிவில்,  பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்றும்,  குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா? என்றும் அண்ணாமலை  கேள்வி எழுப்பியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like