1. Home
  2. தமிழ்நாடு

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகும்.. WHO இயக்குநர்



உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 லட்சத்து 54 பேர் வரை கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகும்.. WHO இயக்குநர்

உலகம் முழுவதும் கொரோனாவால் 36,026,772 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 27,130,029 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகும்.. WHO இயக்குநர்

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் என எதிர்பார்க்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

நமக்கு தற்போது தடுப்பூசி தேவைப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நம்பிக்கையும் இருக்கிறது எனக் கூறியுள்ளார். ஆனால் அதுபற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகும்.. WHO இயக்குநர்இதுவரை 9 தடுப்பூசிகள் மாதிரி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் வெற்றிப்பெறும்போது 2021 இறுதிக்குள் 2 பில்லியன் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like