1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் சர்ச்சை..! பராசக்தி பட தலைப்புக்கு வந்த புதிய எதிர்ப்பு!

Q

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களிலும், நாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படமாகவும் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் வீடியோவைப் படக்குழு நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ பெயரைப் பயன்படுத்திக்கொள்ள ஏ.வி.எம்.நிறுவனம் அனுமதி வழங்கி வாழ்த்தி இருந்தது.

இதனிடையே, ‘பராஷக்தி’ தலைப்பைக் கடந்தாண்டே பதிவு செய்துவிட்டதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

அருண் பிரபு இயக்கும் படத்திற்கு தமிழில் ‘சக்தித் திருமகன்’ என்றும் தெலுங்கில் ‘பராஷக்தி’ எனவும் பெயரிடப்பட்டு பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள விஜய் ஆண்டனி, பதிவிற்கான ஆவணத்தையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், எங்களுக்கு முழு உரியைமான ‘பராசக்தி’ திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கண்சேன் நடிப்பில் 1952-ல் வெளியான ‘பராசக்தி’ படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளிவிழா காண இருக்கும் வேளையில், ‘பராசக்தி’ படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்க இருப்பதாகவும் நேஷனல் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புக்குத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like