தொடரும் சர்ச்சை..! சம்பாதித்த பணத்தை ஆர்த்தி பறித்து விட்டாரா?
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு பெரிதளவில் ரசிகர்கள் இல்லாத போதும் அவரை வெறுப்பவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். விக்ரம், கார்த்தி, ஜீவா உள்ளிட்டவர்கள் பல மேடைகளை ஜெயம் ரவி ஒரு கிளீன் பாய் என்று பேசியிருப்பார்கள். எந்த கிசுகிசுப்பிலும் சிக்காமல் தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி.
இவர்களுடைய விவாகரத்து பிரச்சனையில் ஜெயம் ரவியை ஆர்த்தி ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார் அதை பொறுக்க முடியாமல் தான் ரவி இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று ஒரு தரப்பு கூறி வருகின்றது.
மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆர்த்தியிடம் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று தெளிவாக சொல்லிவிட்டேன். அவர்களுடைய வீட்டுக்கு தெரியும். ஒரு கட்டத்தில் எனக்கு மூச்சு முட்டியது. வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது என்னிடம் எதுவும் இல்லை. ஒரு கார் மட்டும் தான் இருந்தது. இப்போது நான் ஒரு நாடோடி என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறுவது போல எதுவுமே இல்லை கார் மட்டும் தான் இருக்கின்றது என்கின்றார். ஜெயம் ரவி இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கண்டிப்பாக கோடிக்கணக்கில் படத்துக்கு சம்பளம் வாங்கி இருப்பார். அப்படி ஆனால் இதுவரை அவர் சம்பாதித்த பணங்கள் எல்லாம் எங்கே? அத்தனையும் ஆர்த்தி பறித்து விட்டாரா? ரவியிடம் பணமே இல்லையா? என்றெல்லாம் கேள்வியை எழுப்ப தொடங்கியுள்ளனர்.