1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் சரிவில் தங்கம் விலை - மக்கள் மகிழ்ச்சி

சூப்பர் சரிவில் தங்கம் விலை - மக்கள் மகிழ்ச்சி


மார்ச் 22ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் 31,600 ரூபாயாக இருந்தது. ஜூன், 1ல் நகைக்கடைகள் திறந்தபோது, ஒரு பவுன் தங்கம், 35,560 ரூபாய் என உயர்ந்தது. ஊரடங்கால் விமானம், கப்பல் போன்றவை மூலம் தங்கம் வரத்து குறைந்ததாலும், இனி தங்கம் விலை கடுமையாக உயரும் என்ற அச்சத்தால், தினம், தினம் விலை உயர்ந்து ஆக., 7ல் ஒரு பவுன், 44,160 ரூபாய் என உச்சம் தொட்டது.

கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 7 வரை, ஒரு பவுனுக்கு கிட்டத்தட்ட 13 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு 376 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,704 க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 47 ரூபாய் குறைந்து, ரூ.4,838 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் முதல் வாரத்தை ஒப்பிடுகையில் பவுனுக்கு 5,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 66,500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 1,900 குறைந்து 64,600 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in


Trending News

Latest News

You May Like