1. Home
  2. தமிழ்நாடு

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 102 ஆனது..!

1

பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 99 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஏற்கெனவே 2 சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரத்தை சேர்ந்த விஷால் படேலும், பிகாரை சேர்ந்த பப்பு யாதவும் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். 

தற்போது லடாக் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு 27862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷனிஃபா ஆதரவு தெரிவித்துள்ளார். லடாக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டிசெரிங் நம்க்யால் 37,397 வாக்குகளும் பாஜக வேட்பாளர் தாஷி கியால்சன் 31,956 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஹனிஃபா, ஏற்கெனவே லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். லடாக்குக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணையில் சேர்ப்பது, லே மற்றும் கார்கிலுக்கு தனி மக்களவைத் தொகுதி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் ஹனிஃபா வெற்றி பெற முக்கிய காரணங்களாக அமைந்தது. கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் லடாக் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like