1. Home
  2. தமிழ்நாடு

நவி மும்பை விமான நிலையத்தை கடைசி வரை காங்கிரஸ் உருவாக்கவில்லை. ஆனால் நாங்கள் செய்தோம் - பிரதமர் மோடி..!

1

டெல்லியில் நடைபெற்ற ‘ரைசிங் பாரத்’ மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “எத்தனையோ ஆட்சிகள் வந்தன, பாம்பன் பகுதியில் பாலம் கட்டுவதாக சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை.

100 ஆண்டுகளாக இருந்த பழைய பாலத்துக்கு பதிலாக நாங்கள் புதிய பாலம் கட்டி திறந்துள்ளோம். இந்தியா மெதுவாகத்தான் முன்னேறும் என நினைத்தார்கள், ஆனால் இரட்டை வேகத்தில் முன்னேறுகிறோம்.

இந்தியா வேகமாக முன்னேறும், எதற்காகவும் தளராது. உலகின் பார்வை இந்தியாவை நோக்கி உள்ளது. பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். 3ஆவது இடத்திற்கு நிச்சயம் உயர்வோம். தொழில் துவங்க முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்குகிறோம்.

அசாம்- அருணாச்சல் இடையே பிரமாண்ட பாலத்தை கட்டியுள்ளோம். இளைஞர்களின் கண்களில் கனவுகளை பார்க்கிறேன். இளைஞர்களின் கனவுகள்தான் நாட்டை வழி நடத்துகிறது. இந்தியர்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ விரும்புகிறேன்.

வருமான வரியை குறைத்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். 10 ஆயிரம் மருத்துவ இடங்கள், IIT-ல் ஆறு ஆயிரம் இடங்களை அதிகரித்துள்ளோம். எஸ்சி, எஸ்டி, பெண்கள் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். நவி மும்பை விமான நிலையத்தை காங்கிரஸ் கடைசி வரை உருவாக்கவில்லை. ஆனால் நாங்கள் அதை செய்தோம்.ஒருவர் வங்கி கணக்கு தொடங்குவதை எளிதாக்கியுள்ளோம்.” என்றார்.

Trending News

Latest News

You May Like