1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜன.7-ம் தேதி நடைபெறும்..!

1

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை நேற்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 - 24ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு எதிர்வரும் ஜனவரி 7-ம் தேதி அன்று நடத்தப்படவுள்ளது.  இதற்காக 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவு சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் https://www.trb.tn.gov.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வுகள் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து இன்று(நேற்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வு கூட நுழைவுச் சீட்டு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்து முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like