1. Home
  2. தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வால் நட்சத்திரம்... ஆட்சியாளர்களுக்கு ஆபத்து ?

1

தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளாக தமிழரின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.1004 -ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி, 1010 -ஆம் ஆண்டில் முடிவடைந்தது. சோழ மண்டலத்தின் தலைநகராக இருந்த தஞ்சை நகரம் பரந்துபட்ட நகரமாக விளங்கியது. மொத்தம் ஒன்றரை லட்சம் டன்கள் எடை கொண்ட கருங்கற்களை உடைய கோயிலைத் தாங்கி நிற்பதற்கு ஆழமான அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கோயிலுக்கான அடித்தளம் எவ்வளவு ஆழம் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கோயிலின் ஆயிரக்கணக்கான அதிசயங்களில் ஒன்றாக கோயிலுக்கான அடித்தளம் வெறும் 5 அடி ஆழம் மட்டுமே போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அப்படி பல சிறப்புகளை கொண்டுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏனென்றால் இது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

சோழர் ஆட்சி காலத்தில் இதுபோன்று நடப்பது கெட்ட சகுனம். குறிப்பாக, ஆட்சியாளர்களுக்கு ஏதோ கெட்டது நடக்கப்போவதை முன்கூட்டிய உணர்த்தும் செயல், நீண்ட நாள் கழித்து இப்போது தென்பட்டதால், மிகப்பெரிய ஆபத்து வருமோ என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஆனால், வால் நட்சத்திரம் கெட்டதா இல்லையா என்பதெல்லாம் இதுவரை நிரூபணம் ஆகவில்லை.

தஞ்சை பெரிய கோவில் ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு ராசி இல்லாத கோவில் என்பார்கள். அங்கே சென்றால் ஆட்சியாளர்கள் பதவி இழப்பார்கள் என்ற நம்பிக்கை கூட உள்ளது. இப்படிப்பட்ட நிலையத்தில்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று பலரும் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.



 

Trending News

Latest News

You May Like