குடி போதையில் போலீஸ் செய்த அலப்பறை !!

குடி என்பது ஒருவரின் நிலை மறக்கச் செய்யும். ஆம்! தாம் எங்கிருக்கிறோம்? தாம் யார்? நமது அந்தஸ்து என்ன? நமக்கு இந்த சமூகத்தில் எப்படி மரியாதை கொடுக்கின்றனர் போன்ற அனைத்து விஷயங்களும் மறந்து போய்விடும். அதோடு, சிலர் தண்ணி அடித்தால், கவுந்து படுத்து விடுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் சலம்பவே செய்கிறார்கள். அதோடு, பிறருக்கு தொல்லை கொடுப்பது, பொருட்களை உடைப்பது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள், இது போன்ற அசம்பவம் ஹரியானா மாநிலம் சண்டிகரில் நடந்துள்ளது.
அங்கு செக்டர் 47 இல் 60 வயது பெண் ஒருவர் அவரது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான 67 வயது கணவரோடு வசித்து வருகிறார். அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு என தங்கள் வீட்டிற்கு சிசிடிவி கேமராவை பொருத்தி உள்ளார்கள். குர்ணம் சிங் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவர்களின் வீட்டருகே திடீரென ஒரு நாள் குடித்து விட்டு வந்து அங்கிருந்த சிசிடிவி கேமாரவை சேதப்படுத்தி உள்ளார். அதோடு அந்த தம்பதியினரை தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
மேலும், அவர்கள் வீட்டு கரண்ட்டை திருடவும் செய்து, அவர்களுக்கு பல வழியில் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்த தம்பதியினர் போலீசில் அந்த இன்ஸ்பெக்டர் குறித்து புகார் அளித்தனர். அப்போது, இன்ஸ்பெக்டர் செய்யும் சேட்டைகளை பதிவு செய்துள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த இன்ஸ்பெக்டர் குர்ணம் சிங் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன் படி குர்ணம் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
newstm.in