”எனது குடும்பம் எனது பொறுப்பு" என்ற பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர்

மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு, நாள் கொரோனா பாதிப்பு தீவிரமாகிக்கொண்டே போகும் நிலையில் குறிப்பாக மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகரங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இந்நிலையில் 'எனது குடும்பம்-எனது பொறுப்பு' எனும் புதிய பிரசாரத்தை அம் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே துவங்கியுள்ளார்.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இதுபற்றி மும்பை மாநகராட்சி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்சம் 2 மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் , சானிடைசர் திரவத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தின் கீழ், மும்பை மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகி அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க உள்ளனர்.