இலக்கு நிர்ணயித்தார் முதல்வர்..! 200 தொகுதிகளில் வெற்றி

சென்னையில் நடந்த தி.மு.க., சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் உரிமை தொகை திட்டம் மக்களிடம் நல்ல முறையில் சென்று சேர்ந்துள்ளது. எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தி.மு.க., கூட்டணி வலுவாக இருக்கிறது. கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக, செய்து முடியுங்கள்.
தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும். 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு. நிச்சயம் வெற்றி பெறுவோம். பூத் முகவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டதால் தேர்தலில் சீட் கிடைக்காது என கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.