அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும்.. மீண்டும் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் !!

திருக்கோயில் பணியாளா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் பெறும் கோயில்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 31 சதவீதமாக நிா்ணயம் செய்து உத்தரவிடப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயா்வு ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்.
இதன்படி, அா்ச்சகா்கள் மற்றும் சீட்டு விற்பனையாளா்களுக்கு ரூ.2,500, காவல் பணியாளா்களுக்கு ரூ.2,200, தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1,400 என்ற அடிப்படையில் மாத ஊதியம் உயரும். இதன்மூலம் சுமாா் 10,000 கோயில் பணியாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
அரசு ஊழியா்களுக்கு பொங்கல் நாளை முன்னிட்டு, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களுக்கும் ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக் கொடை நிகழாண்டில் ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். இதனால், நிகழாண்டில் ரூ.1.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in