1. Home
  2. தமிழ்நாடு

நாயை சுற்றி சுற்றி விரட்டும் கோழி.. ஏன் தெரியுமா? இந்த வீடியோ பாருங்க !

நாயை சுற்றி சுற்றி விரட்டும் கோழி.. ஏன் தெரியுமா? இந்த வீடியோ பாருங்க !


 சமூக வலைதளங்களில் அவ்வப்போது மக்களை வியப்படையச் செய்யும் வகையில் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வித்தியாசமான செயல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.

அண்மையில் பூனை ஒன்று அதன்  பற்கள் மூலம் எளிதாக பீர் பாட்டிலை திறந்து நம்மை ஆச்சரியப்படுத்தியது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வகையில் இப்போது 'வென் அனிமல்ஸ் அட்டாக்' என்ற சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மனங்களை கவர்ந்துள்ளது.

வென் சிக்கன்ஸ் அட்டாக் என தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில் ஒரு நாயை கோழி ஒன்று துரத்தி வருகிறது. அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளை சுற்றி சுற்றி கோழியும், நாயும் ஓடி விளையாடுகிறது.

கோழி முன்பாக வந்தால் அதைப் பார்த்து எதிர்பக்கத்தில் ஓடுகிறது நாய். கோழியும் முன்னும் பின்னுமாக அந்த நாயைத் துரத்திச் செல்கிறது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பலரும் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like