அதிமுக மாநாட்டிற்கு முதல் ஆளாக வந்த பிரபலம்..!
அதிமுக கட்சி சார்பில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’பாரத தேசத்தின் ‘புதிய பிரதமரை’ முடிவு செய்யும் 2024 நாடாளுமன்றத்தேர்தலை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு, தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினர். பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்.
கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் குழு ஆலோசகருக்கு அடிபணிந்து, கூட்டணி குறித்து கவலை கொள்ளாமல் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெல்லும் அளவுக்கு திறம்பட செயலாற்றுமாறு தலைமைக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளராக முன்னாள் தமிழக முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி தேர்வான பிறகு முதல் மாநாட்டை மதுரையில் நாளை நடத்துகிறார். இந்த மாநாடு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க மாநாட்டுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேரில் வந்துள்ளார். மாநாடு நாளை நடக்கும் நிலையில், அவர் இன்றே மதுரை வந்துள்ளார். மேலும், மாநாடு நடக்கும் இடத்தையும், அமைப்பையும் பார்த்தார். அதைப் பற்றி பிரமித்தும் பேசியுள்ளார். செய்தியாளரிடம் சவுக்கு சங்கர் பேசுகையில், “நாளை நடைபெற உள்ள இந்த மாநாடு தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, அ.தி.மு.க வரலாற்றிலும் ஒரு முக்கியமான நிகழ்வாக நான் பார்க்கிறேன்.
3 ஆண்டுக்கு முன்னனர் அ.தி.மு.க என்கிற கட்சி இருக்குமா? உடைந்து விடுமா?, தேறாது, அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு, எடப்பாடி எல்லாம் ஒரு தலைவர் இல்லை என்றெல்லாம் கூறினார்கள். தற்போது அந்த குழப்பம் எல்லாம் நீக்கியுள்ளது. அ.தி.மு.க ஒன்றிணைந்து நடத்தும் இந்த கூட்டத்தைப் பற்றி அவர்களது தலைவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை பார்க்கவே நான் இங்கு வந்துளேன்.” என்று கூறினார்.