1. Home
  2. தமிழ்நாடு

100 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார்... எமனாக நின்று கொண்டிருந்த லாரி..!

1

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே, உள்ள சௌக் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ONGC) அருகே அதிகாலை 1.30 மணி அளவில் இன்னோவா கார் ஒன்று சுமார் 100 கி.மீ வேகத்தில் வந்துள்ளது.அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் கார் அதிகவேக மோதியுள்ளது. இதனால் கார் அப்பளம் நொறுங்கியது மட்டுமல்லாமல் மேற்கூரை பெயர்ந்துள்ளது.

இதனால், காரில் இருந்த 25 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஆறுபேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்கள் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

1

இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் லாரியின் அடியில் சிக்கி இருந்த இன்னோவா காரை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் காரை வெளியே எடுத்தனர். 

இவர்களில் 5 பேர் டேராடூனையும், ஒருவர் சம்பாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. குணீத் சிங், 19, காமக்ஷி சிங்கால், 20, நவ்யா கோயல், 23, ரிஷப் ஜெயின், 24, மற்றும் அதுல் அகர்வால், 24, மற்றும் ஹிமாச்சலின் சம்பாவைச் சேர்ந்த குணால் குக்ரேஜா, 23, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 வயதான சித்தேஷ் அகர்வால் என்ற அடையாளம் தெரியாத ஏழாவது நபர் மட்டும் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலிருந்த சினெர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், சம்பவம் குறித்தான எந்த தகவலையும் பெற முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 

Trending News

Latest News

You May Like