பிரசாரம் ஓய்ந்தது..! விக்கிரவாண்டியில் 10ம் தேதி வாக்குப்பதிவு..!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேல் பிரசாரம் நடந்தது. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி, நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் ஆகியோர் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்ததால், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 10ம் தேதி வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.