கோழியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்.. உதவிய மனைவிக்கும் நேர்ந்த பரிதாபம் !
இங்கிலாந்தில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் தம்பதி ரெஹான் பேக் (37) - ஹலீமா பேக் (38) தம்பதியர். இவர்களுக்கு பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததே இதற்கு காரணம்.
இவர்கள் மீது இதுவரை அந்நாடு கண்டிராத வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் விலே ரெஹான் பேக், தனது வீட்டின் அடித்தளத்தில் தான் வளர்த்து வந்த கோழியை பலாத்காரம் செய்துள்ளார். அதனை, அவரது மனைவி ஹலீமா பேக் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
அதோடு நிறுத்தாமல் சில நாட்கள் கழித்து தனது கணவர் கோழியை பலாத்காரம் செய்த வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். இதனால் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார் உடனடியாக அந்த வீடியோவை முடக்கியதுடன், தம்பதிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்துதான் இப்போது பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனைவி அவருடன் சேர்ந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ரெஹான் கோழிகளுடன் பாலியல் உறவு கொண்டபோது, தன் மனைவியின் அருகில் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இரு கோழிகளும், அடுத்த சில மணி நேரங்களில் இறந்தன. குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை இழிவானது. மிகவும் வக்கிரமானது. இவர்களது நடவடிக்கைகள் சமூகத்தின் எந்தவொரு சாதாரண மனிதரையும் காயப்படுத்தும் என நீதிபதிகள் கூறினர்.
மேலும், ஹலீமா பேக் தனது கணவரின் கொடூரமான செயலுக்கு உதவியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
முன்னதாக தம்பதியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 2 கணினி, ஒரு மடிக்கணினி, ஒரு மொபைல் போன் மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.
அந்த வீடியோக்களில், நாய் போன்ற வீட்டு விலங்குகளிடம் ரெஹான் பேக் பாலியல் உறவு கொண்ட காட்சிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் கோழியை பலாத்காரம் செய்ததாக கூறும் புகாரில் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
newstm.in