1. Home
  2. தமிழ்நாடு

எமனாக வந்த காளை..! பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி..!

1

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கோட்டை வாசல் ரோடு, நாகூர் - நாகை சாலைகளில் மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர். குறிப்பாக நாகை - நாகூர் பிரதான சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றி திரிந்து வருகின்றது.

dead-body

மேலும் சாலையின் நடுவே படுத்துக் கொள்வதாலும் சுற்றி திரிவதாலும் சாலை நடுவே சண்டையிட்டுக் கொள்ளும் போது விபத்துக்களும் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் உறங்குவதால் மோட்டர் சைக்கிளில் செல்பவர்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றனர்,

இந்த நிலையில் நாகப்பட்டினம் மேலக்கோட்டை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் சபரிராஜன் (55). இவர், தனது வீட்டருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு சலையோரம் நடந்து சென்றிருக்கிறார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சபரிராஜனை முட்டித் தூக்கி வீசியது.

இதில், அவர் எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விபத்து குறித்து வெளியான சிசிடிவி காட்சி வைரலான நிலையில், மாட்டின் உரிமையாளர் தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like