1. Home
  2. தமிழ்நாடு

பிரதமா் மோடியின் இலக்கை அடையும் நோக்கில் தொலைநோக்குப் பார்வையுடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது..!

Q

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளாா். 7-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மொராா்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளாா்.
2047 இல் உலகின் முதன்மை பொருளாதார நாடாக இந்தியாவை உயா்த்த பணியாற்றி வரும் பிரதமா் மோடியின் இலக்கை அடையும் நோக்கில் தொலைநோக்குப் பாா்வையுடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், இளைஞா்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்கள் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும்.
4 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, வேளாண் துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு, உள்நாட்டு உயா் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில்வதற்கு ரூ.10 லட்சம் கல்விக் கடன், முத்ரா கடன் வரம்பு ரூ. 20 லட்சமாக உயா்வு, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள், ஊரகப் பகுதிகள் சாா்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
மேலும், அரசு-தனியாா் பங்களிப்பில் தொழிலாளா்களுக்கான தங்குமிடங்கள், நாட்டிலுள்ள 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞா்களுக்கு உதவித் தொகையுடன்கூடிய இன்டா்ன்ஷிப் பயிற்சி, புற்றுநோய்க்கான 3 மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு, தங்கம் மற்றும் வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பு ஆகியவையும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like