மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கர்ப்பிணியான 13 வயது சிறுமி..!
விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் மாணவியிடம் காதலை தெரிவித்தார். அந்த பெண் அவரை நம்பி நெருங்கி பழகினார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சந்தோஷ் சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து தனது நண்பர்கள் 4 பேரிடம் கூறியுள்ளார்.
சிறுமியை தனியாக அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டினர். 6 மாதங்களாக சிறுமியை அவ்வப்போது அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி பள்ளி முடிந்து சிறுமியை சந்தோஷ் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் 4 பேர் ஏற்கனவே இருந்தனர். சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதனால், மாணவி தாமதமாக வீட்டுக்குச் சென்றார். இரவு வெகுநேரமாகியதால் சந்தேகமடைந்த அவரது தாயார், தாமதம் குறித்து மாணவியிடம் கேட்டதற்கு, மாணவி கதறி அழுதார். தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். அதிர்ச்சியடைந்த அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் 2 மாதம் கர்ப்பிணி என்பது தெரியவந்தது. போலீசார் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.