10 ரூபாய் பான் மசாலாவுக்காக நடைபெற்ற கொடூரக் கொலை!

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் பான் மசாலா கடையை திறக்க மறுத்த முதியவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் நவீன் நகர் எனும் பகுதியில் பான் மசாலா கடை நடத்தி வந்த பிரேம் நரேன் திவாகர் என்பவரிடம் அதே பகுதியில் வசிக்கும் நிதின் என்பவர் ஏப்ரல் 14ஆம் தேதி பான் மசாலா வேண்டும் என கேட்டார். ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை திறக்க முடியாது என முதியவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நிதின் முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பிரேம் நிலைக் குலநை்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து நிதின் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். கடுமையாக தாக்கப்பட்டதால் சுயநினைவை இழந்த பிரேம், உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கான்பூர் போலீஸார் குற்றவாளியான நிதினை தேடி வருகின்றனர்.
newstm.in