செல்ஃபோன் திருடிய சிறுவன்! புது ஃபோன் வாங்கிக் கொடுத்த போலீஸ்!!

ஆன்லைன் வகுப்புக்காக செல்ஃபோனை திருடிய சிறுவனுக்கு காவலர் ஒருவர் புது செல்ஃபோன் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவனின் தந்தை பிஸ்கட் கடையில் வேலை செய்துவருகிறார். அவர்களிடம் பணம் இல்லாததால் ஆன்ட்ராய்டு போன் வாங்க பணமில்லை. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கபதற்காக சிறுவன் செல்போன் ஒன்றை திருடினான்.
ஏற்கெனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள இரண்டு பேர் சிறுவனை உசுப்பேத்தி திருட வைத்துள்ளனர். ஆனால் செல்ஃபோனை திருடும் போது சிறுவனும், அந்த இரண்டு பேரும் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர்.
காவல்துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்திய போது அவனது ஏழ்மை நிலை தெரியவந்தது. பின்னர் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தன் சொந்த செலவில் அந்த சிறுவனுக்கு புதிய செல்போன் வாங்கி பரிசளித்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
newstm.in