1. Home
  2. தமிழ்நாடு

வெடிகுண்டு வெடிக்கும்...! சென்னை தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

1

சென்னை குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்ஐடி) செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாகஅண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது.

வெடிகுண்டு வெடிக்கும்.மாணவர்களை வெளியேற்றும்படி மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டது.  

இது தொடர்பாக உடனடியாக தாம்பரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 6 வெடிகுண்டு நிபுணர்கள் கொண்ட குழுவானது சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம் ஐ டி கல்லூரிக்கு நேரில் சென்று வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்து வருகின்றனர்.

காலை 8 மணி முதல் இந்த சோதனையானது 3 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் சென்னை குரோம்பேட்டை எம் ஐ டி கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது முழுமையான சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. 

Trending News

Latest News

You May Like