ரோஜா பூ மீது படுத்திருக்கும் நீல நிறப்பாம்பு! வைரல் வீடியோ!!

ரோஜா ஒன்றின் மீது நீல நிறப்பாம்பு படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல வண்ணங்களில் நாம் பாம்புகள் பாத்திருந்தாலும் நீல நிறத்தில் பாம்பை பெரும்பாலும் யாரும் பாத்திருக்க மாட்டார்கள். பாம்புகள் எந்த நிறத்தில் இருந்தாலும் மனிதர்களுக்கு பயம் தான்,
அமேசான் காடுகளில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பாம்புகள் உலகில் விஷம் மிகுந்த பாம்புகள் என்று சொல்லப்படுவதுண்டு. இந்நிலையில் நீல நிறத்தில் இருக்கும் பாம்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பாம்பு வெறும் பொம்மையோ என்று எண்ணத்தோன்றும். ஆனால் வீடியோவில் அந்த பாம்பு நாக்கை நீட்டும் போது தான் உண்மையான பாம்பு என்று தெரிகிறது.
பாம்பு பயம் என்றாலும் கூட, ரோஜா மீது நீல நிற பாம்பு இருப்பது பார்க்க அழகாக தான் இருக்கிறது.
The incredibly beautiful Blue Pit Viper pic.twitter.com/zBSIs0cs2t
— Life on Earth (@planetpng) September 17, 2020
newstm.in