1. Home
  2. தமிழ்நாடு

இன்று மதியம் 12 மணிக்கு பா.ஜ.க. தலைமையகத்துக்கு வருகிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

1

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். 

அதில், “பிரதமர் மோடி அவர்களே, சிறையை வைத்து விளையாட்டு காட்டுகிறீர்கள். முதலில் (துணை முதலமைச்சர்) மணிஷ் சிசோடியாவை, பிறகு எம்.பி. சஞ்சய் சிங்கை, அரவிந்த் கெஜ்ரிவாலை என ஒவ்வொருவராகப் பிடித்து உள்ளே போடுகிறீர்கள். நாட்டை ஆளும் அரசாங்கம்  எங்கள் கட்சியின் பின்னால் வந்தபடிகிறது. நாங்கள் செய்ததவறு என்ன? ஏழை எளிய மக்களுக்கு தில்லியில் நல்ல கல்வியைக் கொடுத்தோம்; அது உங்களால் முடியாது. மொகல்லா கிளினிக்குகளைத் திறந்தோம்; அதையும் உங்களால் செய்யமுடியாது. போகிற போக்கில் ஆம் ஆத்மி கட்சியை அழித்துவிட முடியாது. ” எனக் குறிப்பிட்டுள்ளவர், 

“ இன்று மதியம் 12 மணிக்கு எங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.தலைமையகத்துக்கு வருகிறேன். யாரைக் கைதுசெய்ய விரும்புகிறீர்களோ அவர்களைக் கைதுசெய்துகொள்ளுங்கள்.” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like