தமிழ்நாட்டு மக்கள் விவரமாக இருக்கிறார்களே என்று பொறாமை பா.ஜ.கவிற்கு - செல்வப்பெருந்தகை!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை, உண்மைக்குப் பாம்பாக பேசுவதும், இட்டுகட்டி பேசுவதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக முனைப்போடு செயல்படுவதும் பா.ஜ.க தலைவரின் வேலை, ஆனால் செவ்வாலியர் விருதை சிவாஜி கணேசனுக்கு கொடுத்தார்கள், ஆனால் அந்த விருது பா.ஜ.க தலைவருக்கே பொருந்தும். இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு, அதன் பின்பு பேசிய பேச்சை திரும்ப பெறுவது என அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க என்பது தமிழ்நாட்டுக்காரன் கட்சியா? தமிழ்நாட்டை பிரதிபலிக்கிற கட்சியா? என்பதை அவர்கள் கூற வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் எல்லாம் ஒரு புறம் இருக்கிறார்கள், ஆனால் நாக்பூரில் என்ன அஜந்தாவை ஆர்.எஸ்.எஸ் போட்டுக் கொடுக்கிறதோ, அதை ஒன்றிய பா.ஜ.க தமிழ்நாட்டு பா.ஜ.க மூலமாக செயல்படுத்துகிறது. அப்படியானால் எதற்கு ஒரு கட்சி? தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக இருக்கக் கூடிய ஒரு கட்சி தேவையா? மும்மொழி கொள்கையை எங்கள் மீது திணைக்காதீர்கள் என்று கூறுகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்கள் படித்துக் கொள்வார்கள். எதை விருப்ப பாடமாக எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கே தெரியும். நீங்கள் சொல்லிக் கொடுத்தால் தான் அந்த பிள்ளைகள் படிக்குமா, இதை திணைக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். இரு மொழிகளைப் படித்து தான் இன்று பல மேதைகள் குறிப்பாக சுந்தர் பிச்சை இந்த மண்ணை சார்ந்தவர் தானே.
இன்று மிகப் பெரிய அளவில் இருக்கிறார், அவர் என்ன மும்மொழிக் கொள்கையா படித்தார்? இரு மொழிக் கொள்கை தானே படித்தார். பிள்ளைகள் எதை விரும்புகிறார்களோ அதை படித்துக் கொள்வார்கள் திணைக்காதீர்கள். வட கலாச்சாரத்தில் இருந்து, சங்கீத் என்ற ஒன்றை இங்கு எடுத்து வந்து விட்டிருக்கிறீர்கள். சங்கீத் என்பது தமிழ்நாட்டு கலாச்சாரமா? பண்பாடா? இதையெல்லாம் திணித்து இலவசமாக கொடுப்பீர்களா.. இதுபோன்று ஒவ்வொன்றாக எங்கள் தமிழ்நாட்டு மக்கள் மீது திணித்துக் கொண்டு இருக்காதீர்கள். பாரதிய ஜனதா கட்சியினர் தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல்படுகிறார்கள். அனைத்து வகையிலும் சீரழிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். எந்த உடை உடுத்த வேண்டும் என்பதை கூட நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்.
நாங்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்க துடிக்கிறீர்கள். இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களுடைய மக்கள் எங்களுடைய கலாச்சாரத்தை எங்களுடைய மக்களே முடிவு செய்வார்கள். இதையெல்லாம் பா.ஜ.க முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் விரும்பும் உணவை சாப்பிடுவோம் எங்கள் மூதாதையர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக் கூடாது என்பதை நீங்கள் சொல்லிக் கொடுக்கக் கூடாது. இது ஒரு இரும்பு அரசியல், மக்களுக்கு எதிரான அரசியல் என்று கூறியவர், பெருந்தலைவர் காமராஜர் ஆரம்பித்த பள்ளி கல்வித் துறை, இன்று உலகமே போற்றக் கூடிய வகையில் உள்ளது.
சந்திரபாபு நாயுடுவே கூறுகிறார் தமிழ் படித்தவர்கள் நாசாவிலேயே வேலையில் இருக்கிறார்கள் என்று. இதற்கெல்லாம் விதை போட்டவர் காமராஜர் தான். ஆனால் பா.ஜ.க ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை தமிழ்நாட்டின் நலனுக்காக. தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் இவ்வளவு விவரமாக இருக்கிறார்களே என்று பொறாமையும், எரிச்சலுமாய் இருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், ஒன்றிய அரசு குடும்ப நல கட்டுப்பாடு போன்ற திட்டங்களை கொடுத்தபோது அதை முழுமையாக நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தேசபக்தி என்றால் தமிழ்நாடு மட்டும்தான், 7.2 விழுக்காடு என்பதை தொடருகிறோம், 30 ஆண்டுகள் வரை தொடரவுவோம், மறு சீரமைப்பு வேண்டாம் என்பது தான் காங்கிரஸின் முடிவு என்று கூறினார்.