தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் பாஜக ஒரு இஞ்ச் கூட வளரவில்லை..!

தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். அதன் பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். இவரது கருத்துக்கு பாஜகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழகத்தில் ஒரு இஞ்ச் கூட அந்த கட்சி வளரவில்லை என்று நடிகை காயத்ரி விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஒரு திறமையான அரசியல்வாதி என கூறியுள்ள காயத்ரி ரகுராம், அவரது தலைமையிலான அதிமுக நிச்சயம் வளரும் என்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமராவதற்கு 50 சதவீதம் மட்டும் தான் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.