இன்று நடைபெற உள்ள தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க பா.ஜ.க. முடிவு ?

நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திருப்பி அனுப்பினார். இந்நிலையில் 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற இன்று (சனிக்கிழமை) சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னருக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதால் அதை புறக்கணிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்து சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.