ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா நிறைவேற்றம்..!

கர்நாடகாவில் வணிக வளாகங்கள், கடைகளின் பெயர்ப் பலகைகளில் கன்னட மொழி 60% கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற மசோதா மேலவையில் நிறைவேறியது. கீழவையில் இம்மசோதா சில நாட்கள் முன்பு நிறைவேறிய நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாக உள்ளது.
இந்த மசோதா அவசரச் சட்டமாக ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட போது. அதை ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஏற்றுக்கொள்ள மறுத்து, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார்.