1. Home
  2. தமிழ்நாடு

பையன் உசுர விட பைக் ஒன்றும் முக்கியமில்லை - வண்டியை தீயிட்டு கொளுத்திய தந்தை!

11

மத்திய மலேசியாவின் கோலாலம்பூர் அருகே வசித்து வருபவர் ஷா ஆலம். தனது மகன் ஆசைப்படுகிறான் என்று பள்ளிக்கு ஓட்டிச் செல்ல வசதியாக இருக்கும் என்று பைக் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் தான் அவருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கத் துவங்கியது. நாளடைவில் பையன் பள்ளி வகுப்புகளை விட அதிகளவில் மோட்டார் ரேஸ் செல்வதில் கவனம் செலுத்த தொடங்கினா. தொடர்ந்து வரிசையாக பைக் பந்தயங்களில் அடிக்கடி பையன் கலந்து கொள்வதை அறிந்து தந்தை அதிர்ந்து போனார். 

View this post on Instagram

A post shared by SAYS (@saysdotcom)

பைக் ரேஸ் செல்லாதே, ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் என மகனுக்கு அறிவுரை கூற முயன்றாலும், அவரது மகன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது மகனுக்கு எப்படியாவது பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த அப்பாவி தந்தை, தன் மகன் விபத்தில் இறப்பதைக் காட்டிலும் ஆசையாக வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளை எரிப்பது தான் சரியானதாக இருக்கும் என்ற கடுமையான முடிவை எடுத்தார்.

தனது மகனை நிரந்தரமாக இழக்க விரும்பவில்லை என்றும், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக தனது மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு அழைப்பையும் பெற விரும்பவில்லை என்றும் தந்தை கூறினார். தனக்கும் மகனுக்கும் இடையில் மோதலுக்கு முக்கிய காரணம் இந்த மோட்டார் சைக்கிள் தான் என்பதையும் தந்தை உறுதிப்படுத்தினார். அதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் உணர்ந்தார். அதன்படி மகனின் பைக்கை அவர் எரித்தார்.

Malasiya

இதற்கிடையில் இதற்கு முற்றிலும் எதிரான மற்றொரு சம்பவம் மைக் ஜோன்ஸ் என்ற நபருக்கு நிகழ்ந்துள்ளது. இவர் ஒரு பந்தயத்தில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென்று நடுவழியில் தனது ரேஸ் காரை மோதிக் கொண்டார். மற்ற யாரேனும் உதவிக்கு வருவதற்கு முன் தன் தந்தை தன்னைக் காப்பாற்ற ஓடி வருவார் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது தந்தை டீன், விபத்தைப் பார்த்தவுடன், மார்ஷல்கள் எவரும் வருவதற்கு முன், சுவரைத் தாண்டி, தனது மகனின் எரியும் காரை நோக்கி ஓடினார்.

கார் முழுமையாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆனால் தந்தை தனது மகனை இடிபாடுகளில் இருந்து வெளியே இழுத்து காரை விட்டு நகர்த்துவதில் மும்முரமாக இருந்து, அதில் வெற்றியும் பெற்றார். ஒரு சில வினாடிகளில், ஓடுபாதையில் எரிபொருள் கீழே கொட்டியதாலேயே இவ்வுளவு பெரிய விபத்து ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like