மாஸ்டர் ரிலீஸில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் !!

ஓடிடி தளத்தில் 'மாஸ்டர்' வெளியாகாது எனவும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து, பல புதிய படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பல தயாரிப்பாளர்கள் வட்டிக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டுமே என்று ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள். ஏனென்றால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற சூழல் தெரியாமல் இருக்கிறது. அப்படித் திதிறந்தாலும் மக்கள் பயமின்றி வருவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.
இந்நிலையில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்றும் திரையரங்குகள் திறந்தவுடன் வெளியீடு எப்போது என்பது குறித்து முடிவு செய்யவுள்ளோம்" என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
இதனால், விஜய் ரசிகர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம்..
newstm.in