ஏடிஎம் கார்டு மோசடியில் இருந்து தப்பிக்க சிறந்த வழி!!

இன்றைய இணைய உலகத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள், ஷாப்பிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன.
ஆனாலும் இந்த ஏடிஎம் கார்டுகளும் மோசடிகளுக்கு உட்பட்டவையே. இதுவரை ஏராளமானோர் டெபிட் கார்டு மோசடிகளால் நிறைய பணத்தை இழந்துள்ளனர். வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் டெபிட் கார்டு மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
அதனால் பொதுமக்கள் அனைவரும் டெபிட் கார்டு மோசடிகள் குறித்து விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். உங்களின் டெபிட் கார்டு தொடர்பான விவரங்கள் கிடைக்கும்போது அதை வைத்து பணத்தை திருடிவிடுகின்றனர்.
எனவே டெபிட் கார்டு தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதன் மூலம் மோசடிகளை தடுக்கலாம். உங்களுக்கு அழைப்பு விடுக்கும் மோசடி கும்பல்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம், அரசு அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம் என பொய் கூறி தகவலை பெறுகின்றனர்.
நிறைய பணம் கிடைக்கும், சலுகைகள் கிடைக்கும், லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி தகவலை வாங்கி கொள்ளையடிக்கின்றனர். நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாத சில தகவல்கள் பகிராமல் இருந்தால் பண இழப்பை தடுக்கலாம்.
டெபிட் கார்டு PIN நம்பர், டெபிட் கார்டு எண், டெபிட் கார்டின் பின்புறம் இருக்கும் மூன்று இலக்க CVV எண், உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவே கூடாது. இதனை கடைப்பிடித்தால் ஏமாறாமல் தப்ப முடியும்.
newstm.in