அடிப்பவனுக்கு தேவை ஆயுதம் , வலிப்பருக்கு தேவை காரணம் !! கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட்
ஜூன் 19-ம் தேதி இரவு காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் பலத்த காயமடைந்துள்ளனர். ஜூன் 23-ம் தேதி அவர்கள் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவர்கள் உயிரிழந்தது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதால் தான் அவர்கள் உயிரிழந்ததாக வணிகர்கள் மற்றும் குடும்பத்தினர் போராட்டம் நடத்திய நிலையில், இன்று நாடு முழுவதும் இவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு பலத்த குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே#JusticeforJayarajAndFenix
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 27, 2020