1. Home
  2. தமிழ்நாடு

கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்ற 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!



கடைக்கு சென்ற 9 வயது சிறுமிக்கு அந்த கடையின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி அருகே மளிகைக் கடை நடத்தி வரும் முகமது ராவுத்தர் என்பவரின் கடைக்கு பொருட்கள் வாங்க 9 வயது சிறுமி அடிக்கடி வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி வழக்கம்போல் மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடைக்கு வந்த போது அவருக்கு முகமது ராவுத்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமி அழுதவாறே வந்துள்ளார். அவரிடம் சிறுமியின் தாய் விசாரித்தபோது சிறுமி தனக்கு நடந்தவை குறித்து தாயிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவரது தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முகமது ராவுத்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like