ஜூலை 20 முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்..!

செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், உச்ச வயது ஏதுமில்லை. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம், ஜூலை 20-ஆம் தேதி தேதி முதல் தொடங்கும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் தெரிவித்தாா் முகாம் நடக்கும் இடம் குறித்து நியாயவிலைக்கடைகள் தமிழில் தகவல் பலகை அமைக்கவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்களை நியாயவிலைக்கடை பணியாளர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை ஆணையிட்டுள்ளது.