1. Home
  2. தமிழ்நாடு

வருகிறது உளி செயலி..! யுபிஐ போல் கடனுக்கான தனி தளம்..!

1

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வைத்துள்ள பெரும்பாலானோர் அன்றாட பண பரித்தனையை யுபிஐ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் மாத சம்பளதாரர்களுக்கு பல வங்கிகள் தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை மொபைல் பேங்கிங் வாயிலாகவே பேப்ர்லெஸ் முறையில் வழங்கி வருகின்றன. 

இப்படி ஒரு புறம் இருக்க மறுபுறம் இப்படி ஒரு சூழல் உள்ளது. சிறுவணிகர்கள், விவசாயம் போன்ற கிராமப்புற தொழில்முனைவோர் தங்கள் தொழில் தேவைக்கு கடன் பெறுவது சவாலாக உள்ளது. இதற்கு தீர்வாக புதிய டிஜிட்டல் முறை கடன் வழங்கும் திட்டத்திற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு ஒன்றில் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, "யுபிஐ பேமென்ட் தளம் போலவே, யுஎல்ஐ (ULI - Unified Lending Interface) அதாவது ஒருங்கிணைந்த கடன் வழங்கும் தளத்தை உருவாக்க திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் விவசாயத்துறையினர், சிறுகுறு தொழிலாளர்கள் போன்றோர் கடன் பெறுவதற்கான நடைமுறைகள், கால அவகாசம் குறையும்.சம்பந்தப்பட்ட தொழில் முனைவோருக்கு அவர்களின் விவரங்கள் டிஜிட்டல் முறையிலேயே சரிபார்க்கப்பட்டு தகுதி இருக்கும் பட்சத்தில் விரைந்து கடனை வங்கிக்கணக்கில் செலுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான ஆவணங்களை நேரடியாக சமர்பித்து, அதை சரிபார்த்தல் போன்ற பல வேலைகள் குறைக்கப்பட்டு நேரம் மிச்சப்படுத்தப்படும்.

இந்தியாவின் பொது டிஜிட்டல் கட்டமைப்பு புரட்சிகரமான இடத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது" எனவும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like