1. Home
  2. தமிழ்நாடு

சற்றுமுன் வெளியான அறிவிப்பு.. எல்லா பிரச்சினைக்கும் தீர்வு!

1

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை, போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன 

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல், உறுப்பினர் பெயர் நீக்குதல் போன்ற மாற்றங்களைச் செய்ய நினைப்பார்கள். அதேபோல, மொபைல் நம்பர் அப்டேட், பயோ மெட்ரிக் அப்டேட் போன்ற திருத்தங்களும் செய்ய வேண்டியிருக்கும். அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்போது வந்துள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் இதுபோன்ற திருத்தங்களைச்செய்வதற்கு தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அப்டேட் செய்வது மட்டுமல்லாமல் ரேஷன் தொடர்பான தொடர்பான புகார்களையும் பதிவு செய்யலாம்.

பொதுமக்களுக்கான இந்த குறை தீர்ப்பு முகாம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சற்று முன் வெளியிட்டுள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு குறைதீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு, தங்களுடைய ரேஷன் கார்டு தொடர்பான அப்டேட்களை செய்துகொள்வதோடு தங்களுடைய குறைகளையும் நிவர்த்தி செய்துகொள்ளுமாறு தமிழக அரசு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like