நாய்க்குட்டியின் தாகத்தை தீர்க்க சிறுவனின் வியக்கதகு செயல்.. ஹிட் அடித்த வீடியோ !

பொதுவாகவே வளர்ப்பு பிராணிகளுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான நெருக்கம் அலாதியானது. வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை மட்டுமின்றி மாடு, கன்றுகுட்டிகளுடனும் குழந்தைகள் விளையாடுவர். அவைகளை குழந்தைகளால் கொஞ்சப்படும் அழகே தனிதான். இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கிடைக்கின்றன.
ஆனால், நாய்க்குட்டியின் தாகத்தை தணிக்க சிறுவன் செயல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது. நாய்க்குட்டியின் தாகத்தை தணிப்பதற்காக, அடிப்பம்பு மூலமாக தண்ணீரை வரவழைக்கிறான் இந்தச் சிறுவன். கருப்பு நிற நாய்க்குட்டியும் உற்சாகமாக துள்ளிக்குதித்து தனது தாகத்தை தீர்த்துக்கொண்டது. சிறுவனின் கொடை உள்ளத்தை பிரதிபலிப்பதை போல பின்னணியில் கொடுக்கப்பட்டுள்ள இசையானது, காண்போர் மனதை நெகிழச் செய்கிறது.
இந்த வீடியோவை திபான்ஷு காப்ரா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ, லட்சக்கணக்கானோரை கவர்ந்ததையடுத்து பெரும்பாலானோர் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
कद कितना ही छोटा हो, हर कोई किसी की यथासंभव #Help कर सकता है.
— Dipanshu Kabra (@ipskabra) December 7, 2021
Well done kid. God Bless you.
VC- Social Media.#HelpChain #Kindness #BeingKind pic.twitter.com/yQu4k5jyh1
newstm.in