வியாதி குணமடைந்தது

புனே ஜில்லா ஜூன்னர் தாலுக்கா நாராண்காங் வை சேர்ந்த பீமாஜி பாடீல் என்பவர் பல வியாதிகளாலும், நெடுந்தால் நெடுநாள் நெஞ்சு வலியாலும் துன்பத்தை அனுபவித்தார். எல்லா வித சிகிச்சைகளையும் முயன்று ஒரு பிரயோஜனமுமில்லை. எல்லா, நம்பிக்கை யையும், இழந்து முடிவாக கடவுளை நோக்கி அவர் வேண்டிக்கொண்டார். “ஒ நாராயண மூர்த்தியே என்னை காப்பாற்று”. இப்போது என்னை காப்பாற்று. சூழ்நிலைகள் எல்லாம் நன்றாய் இருக்கையில் நாம் கடவுளை நினைப்பதில்லை. கேடும், துரதிர்ஷ்டமும் நம்மைத் தாக்கும் போது நாம் அவரை நினைக்கிறோம். எனவே, பீமாஜி இப்போது கடவுளை நோக்கி திரும்பினார்.
இத்தருணத்தில், சாய்பாபா வின் பெரும் அடியவரான நானாஸாஹேப் சாந்தர்க்கரை கலந்தாலோசிக்க அவருக்கு தோன்றியது. தனது, துன்ப மனத்தையும் கூறி அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவருடை ய கருத்தை தெரிவிக்கக் கேட்டிருந்தார். நானா தமது பதிலில் ஒரே ஒரு வழி தான் உள்ளது. அதாவது, சாய்பாபாவின் பாதங்களினின்று உதவி பெறுவது என்று கூறினார். ஷீரடிக்கு, கொண்டுவரப்பட்டார். முன்னைய தீய கருமங்களாலேயே இவ்வியாதி என்று சாய்பாபா சுட்டி காண்பித்து, முதலில் இதில் தடையில்லா தீர்மானம் இல்லாதவரை இருந்தார். நோயாளியோ தாம் அனாதவனவர் என்றும், அவரையே சரணாகதி அடைந்திருப்பதாகவும், அவர்தம் கடைசிக் கதியென்றும், கருணை காட்டும்படியும், கூறி அலறத் தொடங்கினார். அப்போது சாய்பாபா வின் உள்ளம் உருகியது.
அவர் கூறியதாவது "பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிக்கு வந்தது. ஒருவன் எவ்வளவு தான், நசுக்கப் பட்ட வேதனைப்பட்டவனாக இருப்பினும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கே உள்ள பக்கிரி, மிகவும் அன்பானவர், அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். எல்லோரையும் அன்புடனும். ஆசையுடனும் அவர் பாதுகாப்பார். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நோயாளி, ரத்த வாந்தி எடுத்து கொண்டிருந்தார். ஆனால், சாய்பாபா வின் சந்நிதானத்தில், எவ்வித வாந்தியும் இல்லை. நம்பிக்கையும், கருணையும் கொண்ட மொழிகளை சாய்பாபா உதிர்த்த அத்தருணத்திலிருந்தே வியாதி குணமடையும் நிலைக்குத் திரும்பியது. அசௌகரியமும்,சுகாதாரக்குறைவும் உள்ள பம்பாயின் வீட்டில் தங்கும் படி சாய்பாபாவால் கேட்கப்பட்டார். ஆனால், அங்கு தங்கிருக்கையில், சாய்பாபா அவரை கனவுகள் மூலம் குணப்படுத்தினார்.
முதல் கனவில், தன்னை ஒரு பையனாகவும், மராட்டி, செய்யுள் ஒப்பிக்காததற்காக, உபாத்தியாயரின் கடுமையான பிரம்படியை வாங்கிக் கஷ்டப்படுவதைப் போன்றும், கண்டார். இரண்டாவது, கனவில் ஒரு கல்லை யாரோ ஒருவர் தனது நெஞ்சின் மீது மேலும் கீழும் உருட்டி, கடுமையான வலியையும், வேதனையும் உண்டாக்குவதாகவும் கண்டார். கனவில் அவர்பட்ட இக்கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்தது. அவர் வீடு திரும்பினார். பின்னர், அடிக்கடி ஷீரடி வந்து சாய்பாபா தனக்கு செய்ததை நன்றியுடன் நினைத்து, சாஷ்டாங்கமாய், நமஸ்கரித்தார். சாய்பாபா வும், நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றை த் தவிர, வேறெதையும், எதிர்ப்பார்க்க வில்லை. தனது கிராமத்திற்கு திரும்பிய பீமாஜி பாடீல் புதிய சாயி சத்ய விரத பூஜையை தனது இல்லத்தில் ஆரம்பித்தார்.
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
newstm.in