1. Home
  2. தமிழ்நாடு

உணர வேண்டியவர்கள் உணர்ந்திருந்தால் அதிமுக கூட்டணி 33க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் - ஆர்.பி.உதயகுமார்..!

1

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. அடுத்த இடத்தில் அதிக வாக்கு சதவிகிதத்துடன் அதிமுகவும், 3வது இடத்தில் பாஜகவும் உள்ளன. அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், ராதிகா சரத்குமார் என நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கிய நிலையிலும் பாஜக தோல்வியை சந்தித்தது.

இந்த சூழலில் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு ஒரு காரணத்தை மட்டும் நாம் சொல்லிவிட முடியாது. பிரதமராக மோடியும், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும் வர வேண்டும் என்று நாங்கள் அன்றைக்கு மிகத் தெளிவாக இருந்தோம். பாஜக தொண்டர்களும், தலைவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஒரே ஒரு தலைவருக்கு மட்டும்தான் அதில் முரண்பாடு. அந்த தலைவர் அண்ணாமலை என்பது உங்களுக்கே தெரியும்.

அண்ணாமலையின் அனுபவக் குறைவால் எதிர்க்கட்சிகள் எல்லாம் இழப்பை சந்தித்துள்ளன. அண்ணாமலை பொறுமையாக கையாண்டு இருந்தால் என்றால், நாவடக்கத்தோடு இருந்திருப்பார் என்றால் நிச்சயம் மாற்றம் இருந்திருக்கும்.

நேற்று வரை தனிப் பெரும்பான்மையுடன் இருந்த பாஜக, எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போல இப்போது நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு தயவை நம்பியுள்ளது. பாஜகவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை, திமுகதான் எங்கள் எதிரி. ஆனால், பாஜக எங்களை எதிரியாக பார்த்தது.

ஊர் ரெண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்பது போல மக்களவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாகப் போனது. உணர வேண்டியவர்கள் உணர்ந்திருந்தால் இந்நேரம் அதிமுக கூட்டணி 33க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like