படப்பிடிப்பின் போது சரிந்து விழுந்து உயிரிழந்த நடிகர்! யாரும் உதவ முன் வராததால் நிகழ்ந்த சோகம்!!

கொரோனா பிரச்சனை காரணமாக, கிட்ட தட்ட கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் பணிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
திரையுலகைச் சேர்ந்தவர்களிம் சமீபத்திய இறப்புகள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜி இறந்தது கோலிவுட்டை சோகத்தில் மூழ்கடித்தது.
இந்நிலையில் பிரபல மலையாளநடிகரும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான பிரபீஷ் ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது சரிந்து விழுந்துள்ளார். அவர் மயங்கி விழுந்த போது ஸ்பாட்டில் யாரும் உதவ முன் வரவில்லை என கூறப்படுகிறது. பின்பு அவரது வாகனத்திலேயே அவரை மருத்துவமனை கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஸ்பாட்டில் இருந்த ஒளிப்பதிவாளர் கூறியதாவது, அவர் தொண்டை வரண்டுள்ளது என தண்ணீர் கேட்டதாகவும், தண்ணீர் குடித்த சில நிமிடங்களில் சரிந்து விழுந்ததாகவுக் கூறினார்.