1. Home
  2. தமிழ்நாடு

மரண வாக்கு மூலங்களை பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது..!

1

திருவண்ணாமலையை சேர்ந்த ஜோதி என்ற பெண், கணவர் தன்னை தீ வைத்து எரித்ததாக மரண வாக்கு மூலம் அளித்து இருந்தார். மரண வாக்குமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(செப்.,03) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ 95% காயம் அடைந்திருந்த நிலையில், எப்படி ஜோதியால் சரியாக வாக்குமூலம் கொடுத்திருக்க முடியும்? ‘ மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது’ என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like