தவெகவினரின் செய்த நெகிழ்ச்சி செயல்..! பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்கள் எழுதி கொடுத்தனர்...!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளை அவர்கள் மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர்.
அதனைப் பெற்றுக் கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதற்கான தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மனு எழுதித் தருவதாக அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர மாவட்ட செயலாளர் பார்த்திபன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் சேர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து பொது மக்களுக்கு இலவசமாக தாங்கள் மனு எழுதி கொடுக்கப் போகிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.
இந்த நிலையில் சேலம் நகர காவல் துறையினர் உடனடியாக பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு இலவசமாக அரசே ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருக்கின்றனர். இதனால் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அரசே மனு எழுதிக் கொடுப்பதாக இருந்தால் தாங்கள் திரும்பி செல்கிறோம் என தெரிவித்து அவர்கள் அனைவரும் திரும்பி சென்றனர்.
தமிழக வெற்றி கழகத்தினர் வருகை புரிந்ததை தொடர்ந்து அவசர அவசரமாக அரசு அதிகாரிகள் மனு எழுதுவதற்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு அதிகளவு கட்டணம் வசூலிப்பதை அறிந்த தமிழக வெற்றி கழகத்தினர் இலவசமாக தாங்கள் எழுதித் தருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.