10ஆம் வகுப்பில் இந்த பாடத்திற்கு மட்டும் 75 மதிப்பெண் தான்.. அரசு அறிவிப்பு !

10ஆம் வகுப்பில் இந்த பாடத்திற்கு மட்டும் 75 மதிப்பெண் தான்.. அரசு அறிவிப்பு !

10ஆம் வகுப்பில் இந்த பாடத்திற்கு மட்டும் 75 மதிப்பெண் தான்.. அரசு அறிவிப்பு !
X

தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு தான் கணக்கிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மூடப்பட்டன. 

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தப்பட இருந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த மதிப்பெண்கள் அனைத்தும் மாணவர்கள் காலாண்டு அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுத் தேர்வில்  கணக்கிடப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு  தேர்வுகள் இயக்கம் சார்பில் அறிவுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 10ஆம் வகுப்பில் மொழி பாடங்களான தமிழ், ஆங்கிலம் கணிதம் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்படும் எனவும், அறிவியல் பாடத்தில் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு  மதிப்பெண் கணக்கிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 25 practical பிரிவின் மூலம் அந்தந்த பள்ளியின் மூலம்  வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 1 கடந்த ஆண்டு அரியர் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கிட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கத்தின் உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in 

Next Story
Share it