தட்டார்மடம் கொலை வழக்கு.. செல்வனின் தாயாரும் உயிரிழந்த சோகம் !

தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியில் நிலத்தகராறில் கடந்த 17ஆம் தேதி இளைஞர் செல்வன் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளைஞர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த கொலை வழக்கில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் திருமண வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட செல்வத்தின் தாய் உடல்நலக்குறைவால் காலமானார். செல்வன் இறந்ததிலிருந்து உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செல்வன் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது தாயார் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in