இதனால் தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் : கமல்..!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களவை தேர்தல் பரப்புரையில் நேரடியாக ஈடுபட உள்ளேன்.
ஒரு சக்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும்போது அதற்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் சமய அடிப்படையில், கடப்பாறையை வைத்து குத்தி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் “இதற்கு எதிராக நிற்க வேண்டும் எனும் நிலைப்பாடே என்னை திமுக பக்கம் அணி சேர வைத்தது. திமுக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதனால்தான் தொகுதி கேட்டு நிர்ப்பந்திக்கவில்லை.
“என்னைப் பொறுத்த வரை மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கொள்கை பரப்பு செயலாளர்களைப்போல் செயல்படுகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
“ஒரு சிலர் திராவிடத்தை அழிப்போம் என்கிறார்கள். ஆனால் தேசிய கீதம் இருக்கும் வரை திராவிடம் இருக்கும்,” என்று கமல்ஹாசன் மேலும் கூறினார்.
திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு, அவர்களுடனே கூட்டணியா என்று கேட்கிறார்கள். நமது டிவி, நமது ரிமோட். அது எப்போதும் அங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டிவிக்கான கரண்ட், ரிமோட்டிற்கான பேட்டரிகளை எடுப்பவர்கள் தான் முக்கியம். மக்களவை தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல.
மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன்.மோடி பிரதமர் என்பதற்காக தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலைவணங்க மாட்டேன்
"மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் செல்லுவேன்! நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை. நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது"